Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

புலிவேசம் – முன்னோட்டம்

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • ஆர்.கே.வேர்ல்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்.கே தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘புலிவேசம்’. ‘குசேலன்’ படத்திற்குப் பிறகு தமிழில் பி.வாசு இயக்கும் படம் இது.

    இப்படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா நடிக்கிறார். அதே போல் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய காதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரு நடித்துள்ளனர்.
    இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். கருணாமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆக்ஷன் கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாம். கதையை பற்றி இதுவரை இயக்குனர் தரப்பும் சரி, நடிகர் தரப்பும் சரி மூச்சு விடவில்லை.
    இப்படத்தின் கதை மற்றும் தலைப்பை தேர்வு செய்ததது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்.
    இதுகுறித்து நடிகர் ஆர்.கே கூறியதாவது; ‘புலிவேசம்’ கதை ரஜினி சாருக்கு நன்கு பரிச்சயமான கதை. வாசு சார் ஏற்கெனவே அவரிடம் சொல்லி வைத்திருந்த கதை.

    எங்க கதை டிஸ்கஷனுக்கு நாலஞ்சு நாட்கள் ரஜினி சாரும் வந்தார். இந்தக் கதை என்ன ஷேப்ல வந்தா எனக்கு சரியா இருக்கும் என்பதைச் சொன்னவர் ரஜினி சார்தான்.
    படத்துக்கு ‘முகமூடி’, ‘புலி வேசம்’, ‘ஆர்ப்பாட்டம்’ என்று தலைப்புகள் தேர்வு செய்து ரஜினி சார்கிட்ட கொடுத்தோம். முகமூடி தலைப்பை எடுத்த எடுப்பிலேயே வேணாம்னு சொல்லிட்டார்.

    ‘இப்பதான் ஆர்.கே ஒரு வேகத்தில் வந்துட்டிருக்கார். இப்பவே அவருக்கு ‘முகமூடி’ போட வேணாம். இது ஆர்ப்பாட்டம் இல்லாத கதை. அதனால ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பு கூட வேணாம். என்னோட சாய்ஸ் புலிவேசம்தான். நாம் ஒவ்வொருத்தரும் தெரிஞ்சோ, தெரியாமலோ இந்த உலகத்துல ஒரு வேஷம் போட வேண்டியிருக்கு. கதையின் அமைப்பையும் கிட்டத்தட்ட இந்த தலைப்பே சொல்ற மாதிரி இருக்கு. அதனால், ‘புலி வேசம்’னே வைங்க… வித்தியாசமாவும் இருக்கும்” என்றார்.

    ரஜினிகாந்தின் ஆசீர்வாதத்துடன் வரும் ஆகஸ்ட் 26 அன்று புலி வேசம் கட்ட திரைக்கு வருகிறது.

    Related Posts :



    0 comments:

    Post a Comment