திரைப்படத் துறையினரை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயம் திருட்டு விசிடி. இதனை ஒழிக்க எத்தனையோ வழிகளை நடைமுறைப்படுத்தியும் இதுவரை திரையுலகினருக்கு வெற்றி கிடைத்தபாடில்லை.
அரசும் திருட்டு விசிடி ஒழிப்புக்கென்றே காவல் துறையில் தனி பிரிவையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் அவ்வப்போது ஆயிரக்கணக்கில் புதுப்பட டிவிடிக்களைப் பறிமுதல் செய்தாலும், பிரச்சினை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பி வாசு இயக்கத்தில் வெளியாகும் புலிவேசம் படத்தை பைரசியிலிருந்து காக்கும்பொருட்டு, புதிய பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளார்கள்.
இந்தப் படத்தை ரூ 10 லட்சம் செலவில் டிஜிட்டல் செக்யூரிட்டி செய்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே. இதன்படி, படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்காவது ஆன்லைனில் இந்தப் படம் டவுன்லோடு செய்யப்படும்போதே, இந்த சாப்ட்வேர் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவேளை டோரண்ட் போன்ற தளங்களில் பதிவு செய்தவர்கள், அதனை திரையில் ஓடவிட்டால், அடுத்த 15 நிமிடங்களில் புலிவேசம் திருட்டு விசிடி கண்காணிப்பு குழுவுக்குத் தெரிந்துவிடும்.
இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது.
ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டிவிடியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், "ஆன்லைன் திருட்டு விசிடியைத் தடுக்க டிஜிட்டல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இது நிச்சயம் நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். அடுத்து வியாபாரிகள் மூலம் நடக்கும் திருட்டு விசிடி விற்பனையைத் தடுக்கவும் ஒரு புதிய திட்டம் வைத்துள்ளோம். இந்த திட்டப்படி, சில்லறையாக விற்பவரை விட்டுவிட்டு, இந்த டிவிடிகளை மொத்தமாக அடித்துக் கொடுப்பவரை பிடிக்க முயற்சிக்கிறோம்," என்றார்.
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகிறது புலிவேசம்.

0 comments:
Post a Comment