
அது ஆங்காங்கே புலிவேஷம் போட்டு ஆட்டமாடும் புலிவேசக்காரர்கள். எதற்காக என்பது இந்நேரம் புரிந்திருக்கும்... ஆம். புலிவேசம் படத்தின் விளம்பரத்துக்காகத்தான்.
இந்தப் படம் தொடர்பாக எந்தெந்த வகையிலெல்லாம் விளம்பரம் செய்ய முடியும் அத்தனை வழிகளையும் கையாண்டு வருகிறார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே. இவரது விளம்பர உத்திகளைப் பார்த்து, இயக்குநர் பி வாசுவே, "என் படங்களிலேயே புதுமையான விளம்பரங்களைப் பார்த்தது புலிவேசம்தான்" என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.
படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், புலி வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னை முழுக்க உலா வருகின்றனர், புலிவேசம் விளம்பர பனியன்களுடன்.
இதை வேடிக்கைப் பார்க்கவும் ஏக கூட்டம் கூடுகிறது.
இந்த நிலையில், படம் குறித்த பாஸிடிவ் பேச்சுக்கள் காரணமாக சன் டிவி நல்ல விலைக்கு புலிவேசத்தை வாங்கியிருக்கிறது.
1 comments:
wel come come back karthik hittttttttttttt movie
Post a Comment