

இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவியாளராக இருந்த வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக விஜய் ஆண்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா ராஜும்


இந்த படத்திற்கு 'ஜிந்தா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கேங்ஸ்டார் காமெடி படம் என்றும் கார்த்திக் இந்த படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் 'கபாலி' படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'நீ எங்கே என் அன்பே', கப்பல் படங்களை அடுத்து வைபவ் ரெட்டிக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' மற்றும் ஆதாம்ஸ் ஆப்பிள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment