தமிழ் சினிமாவில் தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்
கார்த்திக். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படம் மூலம் தமிழ்
சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இதில் வில்லனாக நடித்த கார்த்திக்கை
ரசிகர்கள் பெருமளவு வரவேற்றனர். தற்போது இவர் ‘ஜிந்தா’ என்னும் படத்தில்
பந்தாவாக களம் இறங்கியிருக்கிறார்.ஜிந்தா படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் பெரும் பங்காக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
உற்சாகமும் துள்ளலும் நிறைந்த கதையாக இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதையை எழுதும்போதே கார்த்திக் மற்றும் வைபவ்வை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று இயக்குனர் வெற்றி செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment