கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியன் மிக வரைவில்
இயக்குனர் சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் சுந்தரபாண்டியன் என்கிற படத்தினை அறிமுக இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி வருகிறார். சசிக்குமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் மற்றும் விஜய சேதுபதி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இசையமைப்பாளர் ரகு நந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சசிக்குமார் நடிக்கும் சுந்தரபாண்டியன் என்கிற தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கார்த்திக் நடித்து வெளிவந்த சுந்தரபாண்டியனின் பட இயக்குனர் தயாரிப்பாளர் ரகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிபதி சசிக்குமார் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறார்.
இது குறித்து கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியனை இயக்கிய ரகு கூறும் பொழுது, “ 1998 இல் ஆரம்பிக்கப்பட்டு 1999 தீபாவளிக்கு வெளியான படம் எனது சுந்தரபாண்டியன். முதலில் திருச்சி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மூன்று ஏரியாக்களிலும் சிறிது நாட்களிலேயே கோயம்புத்தூரிலும் வெளியானது. மற்ற ஏரியாக்களிலும் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தடை வாங்கியிருக்கிறோம்..”
சசிக்குமார் படம் ஆரம்பிக்கும் போதே உங்களுக்குத் தெரியாதா..? என்று கேட்டபொழுது சில தகவல் பறிமாற்ற இடைவெளியினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது என்றார்.
POST LINK - Click here
0 comments:
Post a Comment