Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

நவரச நாயகன் கார்த்திக் இன் பிறந்த நாள் இன்று...

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • தமிழ் சினிமா ரசிகைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நடிகர்கள் கவர்ந்து இழுத்தனர். இதில் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்குவது நவரச நாயகன் கார்த்திக் தான்.

    பிரபல நடிகர் முத்துராமன் அவர்களின் மகனான கார்த்திக் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்.

    முதல் படமே மாபெரும் வெற்றியடைய அதை தொடர்ந்து இவர் நடித்த நினைவெல்லாம் நித்யா, இளஞ்சோடிகள், நினைவுகள், என பல படங்கள் நடித்தாலும், 1986ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம் படம் தான் கார்த்தியின் பெண் ரசிகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்தது.
      
    இப்படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைந்தது 20 நிமிடம் தான், ஆனால், அதன் பாதிப்பு இன்று வரை மௌன ராகம் படத்தின் கார்த்திக் போல் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் முயற்சி செய்து கிடைத்தது பல்ப் தான்.



    தனது நடிப்பால் விரைவிலேயே "நவரச நாயகன்" என்ற பட்டத்தைப் பெற்றார். 20 வயதில் நாயகனாக அறிமுகமான கார்த்திக் சுமார் 35 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு 2 மொழிகளிலும் 130 படங்களில் கார்த்திக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து கார்த்தி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவிட்டார்

    அதன்  பின் இவர் நடித்தஅக்னி நட்சத்திரம், கண் சிமிட்டும் நேரம் வருஷம் பதினாறு, கிழக்கு வாசல் நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், பிஸ்தா, உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, பாண்டி நாட்டுத் தங்கம்,பெரிய வீட்டு பணக்காரன்,சின்ன ஜமீன்,கோகுலத்தில் சீதை,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,பூவேலிஎன இவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். 

    இவர் 4 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

    1981 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்திக்,
    தற்போது இளம் நாயகர்களுடன் இணைந்து கார்த்திக் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து கார்த்திக் நடித்த அனேகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

    தொடர்ந்து அமரன் 2 திரைப்படத்தில் நாயகனாகவும், இளம்நடிகர் வைபவுடன் இணைந்து ஜிந்தா திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

    தற்போது இவரின் மகனும் சினிமாவில் கலக்க களம் இறங்க, அவருக்கும் போட்டியாக அனேகன் படத்தில் புதிய பரிமாணத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் கார்த்திக். அவர் இதேபோல் என்றும் திரையில் தோன்றி நம்மை மகிழ்விக்க வேண்டும் என இவரின் பிறந்தநாளான இன்று http://karthikfan.blogspot.com தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

    Related Posts :



    0 comments:

    Post a Comment