நவரச நாயகன் கார்த்திக் அமரன் II
அறிமுகமான முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியைத் தொட்டு, 80-களின்
நவரச நாயகனாகவும், பெண்களின் கனவு நாயகனாகவும்
வலம் வந்தவர் கார்த்திக். சிவாஜி, கமல் என்ற
வரிசையில் அடுத்த நாற்காலியில் அமர முழுத்தகுதி படைத்த நடிகராக இருந்தவர் கார்த்திக்.
எண்பதுகளில்
நடிகராக அறிமுகமான கார்த்திக் சுமார் 20 ஆண்டுகள் தமிழ்சினிமாவில் கோலாச்சினார். தனது
துள்ளல் மற்றும் காமெடி நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கட்டி போட்டு வைத்திருந்த கார்த்திக்,


‘அமரன் 2’ படத்தின் புகைப்படங்களில் 1992ம் ஆண்டு வெளிவந்த ‘அமரன்’ படத்தில் இருப்பதைப் போன்றே இப்போதும் தெரிகிறார் நவரச நாயகன் கார்த்திக்.
ராஜேஷ்வரின் இயக்கத்தில் வந்து ஒரு தாதா படமான அமரன் ஓடியது அதன் வித்தியாசமான ஒளிப்பதிவு மற்றும் காட்பாதர் ஸ்டைல் மேக்கிங் மற்றும் நாயகன் டைப் கதைக்காக. இப்போது அமரன்-2 வை இயக்கப்போவதும் ஸேம் ராஜேஷ்வர்.
காதல் மன்னனாக திரையில் வலம் வந்து கொண்டிருந்த கார்த்திக்கை ஒரு கேங்ஸ்டாராக வித்தியாசமான கேரக்டரில் அமரன் முதல் பாகத்தில் நடிக்க வைத்த கே.ராஜேஷ்வர், மீண்டும் கார்த்திக்கை அதே போன்ற கேரக்டரில் நடிக்க வைக்கவுள்ளார்.
'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரியான கார்த்திக்கின் நடிப்பு, பெரிதும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டதால், மீண்டும் அவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக ராஜேஷ்வர் கூறியுள்ளார். இந்த படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

வெத்தல போட்ட சோக்குல’ என்று கார்த்திக் பாடுவதும், அதற்கு ஏற்ப சில்க் ஸ்மிதாவின் நடனமும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று
இந்த படத்தின்
படப்பிடிப்பை லண்டன், மாஸ்கோ, மற்றும்
இத்தாலி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக
கூறியுள்ள கே.ராஜேஷ்வர், இந்த படத்தை ஓர்லவ் மீடியா
புரடொக்ஷன்ஸ்'(Orlov Media Productions) என்ற
நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறினார்.
60 வயதில் கமல், ரஜினி போன்ற மெகா ஸ்டார்களே இன்னும் ஹீரோக்களாக நடிக்கும்போது ஏன் கார்த்திக் நடிக்கமுடியாது ?
0 comments:
Post a Comment