பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு, தெலுங்கு, இந்தியில்
இருந்து சில மெகா படங்களுக்கு வில்லன்களை கொண்டு வந்தனர். ஆனபோதும்,
அவர்களால் தமிழில் சைன் பண்ண முடியவில்லை.
அதனால் இப்போது அப்பா
வேடங்களுக்கு மாஜி ஹீரோக்களை அழைத்து வருவது போன்று, வில்லனுக்கும் மாஜி
ஹீரோக்களை புது எனர்ஜி கொடுத்து கொண்டு வரலாமே என்று உதித்த யோசனையின்
பயனாகத்தான், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்திற்காக நவரச நாயகன் கார்த்திகை
வில்லனாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.
அந்த படத்துக்காக தனது கெட்டப்பை
மறுபடியும் யூத்புல்லாக மாற்றியிருக்கும் கார்த்திக், பழைய கார்த்திக்கை
நினைவுபடுத்தும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் முதன்முறையாக
நான்கு கெட்டப்புகளில் நடிக்கும் அப்படத்தில், கார்த்திக்கிற்கும்,
தனுசுக்குமிடையே பலத்த நடிப்பு போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம்.
மேலும்,
ஹீரோவாக நடித்து வந்த காலத்தில், நினைத்த நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு
வருவது, திடீரென்று இதோ வருகிறேன் என்று ஓட்டம் பிடிப்பதுமாக இருந்து வந்த
கார்த்திக், இப்போது முற்றிலும் புதியவராக மாறி விட்டாராம். புதுமுக
நடிகர்கள் போன்று 9 மணிக்கே ஸ்பாட்டில் அஜராகி விடுபவர், 6 மணிக்கு
டைரக்டர் பேக்அப் சொன்ன பிறகுதான் அவுட் போகிறாராம்.
அவரது இந்த
மாற்றத்தைக் கேள்விப்பட்டு இப்போது, அஜீத்தைக் கொண்டு கெளதம்மேனன் இயக்கும்
படத்திற்கும் கார்த்திக்கை வில்லனாக கமிட் பண்ணியுள்ளார்கள். அதோடு,
அனேகன் படத்திற்கு அவர் காட்டும் ஆர்வம், உழைப்பைக் கேள்விப்பட்டவர்கள்,
அப்படின்னா, இந்த படத்திலும் அஜீத்துக்கும், கார்த்திக்குமிடையே மிகப்பெரிய
பலப்பரீடசை நடக்கும் என்று கூறுபவர்கள், இதே பாணியில் போனால், வில்லன்
பஞ்சம் தலைவிரித்தாடும் கோலிவுட்டில் அடுத்து முன்னணி வில்லன் நடிகராகி
விடுவார் கார்த்திக் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
வில்லன் பஞ்சத்தை தீர்க்க வந்த நவரச நாயகன் கார்த்திக்
Posted on by Welcome Karthik Fans in
Labels:
Media News
Related Posts :
Labels:
Media News
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment