
தனுஷ் , கேவி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அநேகன்’.
இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக 80களின் காதல் நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.
கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால், தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை.

இப்போது, ‘அநேகன்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் .
கார்த்திக் இப்போது நடித்தாலும் நாயகனாகவே நடிக்கலாம். சமீபத்தில் அவர் மகன் நடித்த ‘என்னமோ ஏதோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரைப் பார்த்த பலரும் பேசிய பேச்சுதான் அது.

காரத்திக் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் அவருடைய மகனுக்கு மட்டுமல்ல, காதல் நாயகன் என்று சொல்லும் பலருக்கும் போட்டிதான்…
0 comments:
Post a Comment