வாமனன் படம் மூலம்
தமிழில் நாயகியாக அறிமுகமானவர்
பிரியா ஆனந்த். ‘எதிர்
நீச்சல்’, ‘வணக்கம்
சென்னை’ படங்கள் இவரை
பிரபலப்படுத்தியது.
தற்போது ‘வை
ராஜா வை’, ‘அரிமா
நம்பி’, ‘இரும்புக் குதிரை’, ‘ஒரு
ஊர்ல ரெண்டு ராஜா’, ‘பொடியன்’ என
ஐந்து படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி
ப்ரியா ஆனந்த் சொல்கிறார்.
நான் நடித்த
படங்கள் நன்றாக ஓடின. எனக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தின. ‘இங்கிலீஸ்
விங்கிலீஸ்’ படம்
மூலம் இந்தியிலும் பிரபலம் ஆனேன்.
என் பெற்றோர்
அமெரிக்காவில் உள்ளனர். நான் சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறேன்.
கவர்ச்சி என்பது உடம்பிலும், ஆடைகளிலும் இல்லை. நடிப்பில் தான் இருக்கிறது.
எனக்கு பிடித்த நடிகை
ஸ்ரீதேவி இப்போதைய நடிகர்களில் கவுதம் கார்த்திக் பிடித்தமானவர்.
கவுதம் கார்த்திக் தந்தை கார்த்திக் நவரச நாயகன். மிகவும் அழகானவர்.
கார்த்திக்குடன் நடிக்க ஆசை உள்ளது.
சினிமாவில் அதர்வா, விசாகா
நெருங்கிய நண்பர்கள், எதிர்
நீச்சல் படத்தில் நடித்த நந்திதாவும் தோழியாகிவிட்டார்.
நான் யாரையும்
காதலிக்கவில்லை. பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை. என்னுடன் நடிக்கும்
பல நடிகர்கள் திருமணமானவர்கள். எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை
பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
0 comments:
Post a Comment