மிஸ்டர். சந்திரமோலி....
மிஸ்டர். சந்திரமோலி....
துள்ளலும் துடிப்புமாய்க் கார்த்திக் கலக்கியெடுத்த இந்தக் காட்சிகளை மறக்க முடியுமா!!! :-)
நவீன தமிழ் சினிமாவின் ஆழப் பதிந்த கல்வெட்டான "மௌனராகம்" திரைக்கதையில் "மனோகர்" இடையே தெறிக்கும் ஒரு மின்னல் வெட்டு!!
மணிரத்னத்தின் உலகத் தரமான இந்த "மௌனத்"துக்குத் தமிழின் "பி" அண்ட் "சி" யும் கூட "சம்மதம்" சொன்னதற்கு முக்கியக் காரணம் இடையே ஓர் இருபது நிமிடம் மனோகராக வாழ்ந்து மடியும் இடியும் மின்னலுமான கார்த்திக்கின் இந்த "மனோகர்" கதாபாத்திரம்தான் என்று தைரியமாக சொல்லலாம்...!
கார்த்திக்..... இவர் மட்டும் முத்துராமன் மகனாக இல்லாமல் ஜெய்சங்கர் மகனாகப் பிறந்திருந்தால் (!) இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் செய்ய ஆளில்லாமல் கூடப் போயிருக்கலாம் அந்தக் காலகட்டத்தில்!!! :)))) (அந்தக்காலத்தில் பிள்ளையில்லாத எம் ஜி ஆர் தவிர தன் வாரிசை நடிகராக்க முனையாத ஒரே பெரிய ஹீரோ ஜெய்சங்கர்தான்!)
உண்மையிலேயே இன்றுவரை கூட இந்தக் கேரக்டரின் துருதுரு சுறுசுறுப்பிற்குக் கார்த்திக்கைத் தவிர வேறுயாரும் இவ்வளவு கச்சிதமாகப் பொருந்தமுடியுமா என்பது கேள்விக்குறிதான்... துருதுருவென அலைமோதி, மாடுலேஷன்களை மாற்றி மாற்றியே திவ்யாவின் (ரேவதி)காதலைவெல்லும், முக்கால் கை மடித்த காட்டன் ஷர்ட்டும், ஸ்மார்ட் காஷுவல் ஜீன்ஸும் போட்டு, ஷேவ் செய்தும் செய்யாமலும் அசால்ட்டாக அதிரடியால் அசத்திய இந்த மனோகரின் சேட்டைகளையும், "மணி ரத்ன"க் குறும்புகளையும் இன்றுகூட ரசிக்க முடியும் ஃப்ரஷ்ஷாக!!!
மென்மை இழையோடும மோகன்-ரேவதி காம்பினேஷன் காட்சிகளுக்கு இடையே புயலாகப் புகுத்திய பார்ட்-டைம் பரபரப்பாக ஒரு சிதறடிக்கும் சீக்வென்ஸ்... அதுவும் படுசிம்பிளாக.......
ஒரு ஃபைட்.... அடையாள அணிவகுப்பில் காட்டிக்கொடுக்கும் ரேவதியைப் பார்த்து ஒரு விங்க்!........அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் என்று காலேஜில் புகுந்து புளுகும் புருடா,....பல்லவனை பைக்கால் மறித்து ஒரு சினிமாட்டிக் சேட்டை........ ஓபன் ரெஸ்டாரெண்டில் "மிஸ்டர். சந்திரமோலி"!!........லைப்ரரியில் "ஹலோ ஹலோ மைக்டெஸ்டிங்"...... நடுவே இவரு "புரட்சி ஊர்வலத்"துக்கு ஒரு ப்ளான் வேற பண்ணுவாறு..... ரேவதியிடம் பிடிவாதமான கேரக்டராக நடித்துவிட்டு அடுத்தசீனிலேயே கொட்டுற மழையில் ரொமாண்டிக்காக சிரித்து சிரித்தே அவளைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்துத் தேவையேயில்லாமல் ரோட்டில் குண்டடிபட்டு செத்துவிழும் தனித்துவமான சிம்ப்ளி சூப்பர்ப் ஃப்ளாஷ்பேக் சீக்வென்ஸ்...... !!!
இளையராஜா... ஒரு சிலிர்க்க வைக்கும் திடீர் ஜெர்க்கில் ஆரம்பித்துவைத்து..... ஜாலியாக ரசித்து இசைத்து....அவன் படிக்கட்டில் உருண்டு செத்துவிழும்போது வயலினோடு இழுத்து முடித்திருப்பார் மனோகரின் எபிசோடை இசையாக...
அதுவரை தூரத்தில் இருந்து மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்தும்.... அசைவதே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் அசைந்துகொடுத்தும் உயிரோடு ஒளிப்பதிவு செய்திருந்த பி.சி ஸ்ரீராமும், திரையில் கார்த்திக் தோன்றிய உடனேயே, அவன் நடந்தால் நடந்து... ஓடினால் ஓடி.. அந்த வேகத்துக்கும் துள்ளலுக்கும் துடிப்போடு ஈடுகொடுத்து ஓடிக் களைத்து முடித்திருப்பார், வெறும் உடலாக மனோகர் கிடப்பதை அந்த லாங் ஷாட்டில் ஒரு நிமிடம் நிலையாக நின்றுகாட்டி....!
இருபத்து நாலு வருடம் கழித்து எதற்கு துருதுரு மனோகருக்குத் திடீரென இப்படியொரு பாராட்டுவிழா என்றால்.... 'திரைக்கதை' என்னும் ஒரு மந்திரம்தான் திரையில் விரியும் அத்தனை மாயாஜாலங்களுக்கும் ஆதாரமூலம் என்பதை உணராத ஆடியன்ஸ் நிறையபேர் இருந்த காலத்திலேயே, தமிழ்த் திரைக்கதைகள் தனக்கென நவீனமான மரபுகளைக் கண்டிப்புடன் வரையறுத்துக்கொள்ளாத காலத்திலேயே, பின்னாளில் வளர்ந்த திரைக்கதையின் மரபுகளைக்கூட முன்கூட்டியே உடைத்துவிட்ட ஒரு வெற்றிக் கதாபாத்திரம் "மனோகர்"....
உதாரணமாக சொல்லப்போனால்... நிகழ்காலத் திரைக்கதைகளில் எல்லாப் படங்களிலுமே விதிகளுக்கு உட்பட்டு முதல் பத்துக் காட்சிகளிலேயே அத்தனைக் கதாபாத்திரங்களின் அறிமுக அணிவகுப்பு கட்டாயமாகிவிடுகின்றது...ஃப்ளாஷ்பேக்கில் வரப்போகும் "ட்விஸ்ட்" கேரக்டருக்குக்கூட மாலைபோட்ட ஒரு ஃபோட்டோவைக் காட்டி முன்னுரை எழுதிவைத்துக்கொள்வது சேஃப்டியாக இருக்கிறது!
ஆனால் எண்பத்தாறில் மணிரத்னம் எழுதிய இந்த எவர்க்ரீன் திரைக்கதையில்.... மென்மையான ஆரம்பக் காட்சிகளில் ஒரு 'ஹிண்ட்' கூடக் கொடுக்காமல் திடீரென ஒரு புயலாய் "மனோகரை" இறக்கிவிட்டு புயலடித்து ஓய்ந்த பின்னும் கவிதையான காட்சிகளைவைத்தே சிகரம் தொட்டு ஏறி இறங்கும் ரசிகனின் ஹார்ட் பீட்டை ஸ்க்ரீனில் பேலன்ஸ் செய்திருந்த மணிரத்னத்தின் திரைக்கதை வித்தையை நினைத்துதான் இன்றும் வியக்கிறேன்... ஓர் ஆர்வலனாக!!
"மௌன ராகம்" கார்த்திக் மாதிரியான மனங்கவர் பவர்ஃபுல் பாத்திரங்கள் தமிழில் அரிது என்றே சொல்லலாம்.... உங்களின் சாய்ஸில் அதுபோல பிடித்த சில ரோல்களை சொல்லுங்களேன்!! :-)
Link for Articles website
0 comments:
Post a Comment