கரைஞ்சா பஞ்சு மிட்டாய், கடிச்சா கடலை
மிட்டாய் என்று கோடம்பாக்கத்தின் புது ருசியாக வந்து சேர்ந்திருக்கிறார்
கௌதம் கார்த்திக். கடல் கவிழ்த்துவிட்டாலும், இவரது மார்க்கெட் நாளொரு
புக்கிங்கும் பொழுதொரு அட்வான்சாகவும்தான் நகரும் போலிருக்கிறது. அடுத்து
பிரபு சாலமன் படத்தில் நடிப்பதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும்
இவருக்கு வழிகாட்டியாக இருப்பவர் அப்பா கார்த்திக்தான்.
அண்மையில் கார்த்திக்கை சந்தித்த பிரபல
தயாரிப்பாளர் ஒருவர், ‘நம்ம பேனர்ல பையனை நடிக்க வைக்கணும்’ என்று
அன்பாகயும் உரிமையாகவும் கேட்டுக் கொண்டாராம். சம்பள பேச்சு வார்த்தையையும்
அப்படியே மெல்ல ஆரம்பித்தார்கள் இருவரும்.
சார் நான் இத்தனை படங்களில்
நடிச்சிருக்கேன். ஒரு தயாரிப்பாளரிடம் கூட இவ்வளவு கொடுங்க என்று வாய்
தவறியும் கேட்டதில்ல. அவங்க அதிகமா கொடுத்தா தேங்ஸ் பாஸ்னு சொல்வேன்.
கொஞ்சமா கொடுத்தாங்கன்னா, என்ன பாஸ் இப்படின்னு சொல்வேன். சரியா
கொடுத்துட்டாங்கன்னா, எப்ப ஷட்டிங்குன்னு கேட்பேன். ஆனால் அதுக்கு சரியான
டயத்துக்கு போனேனான்னு கேட்காதீங்க. அதே மாதிரி என் பையனையும் கொண்டு
வரணும்னு ஆசைப்படுறேன். ஆனால் டயத்துக்கு ஸ்பாட்ல இருக்கிற ஹீரோவாக. சம்பள
விஷயத்திலே என்னை மாதிரி அவனா வாய் திறந்து கேட்கவே கூடாது.
அவனுக்கு என்ன கொடுக்கலாம்னு இன்டஸ்ட்ரி
நினைக்குதோ, கொடுக்கட்டும். அது அதிகமாக இருந்தாலும் சரி, குறைவா
இருந்தாலும் சரி. மனசார வாங்கிக்கிறேன் என்றாராம்.
ஒரு படத்தில் அறிமுகமாகி, கொஞ்சம் ஊராரால்
கவனிக்கப்பட்டால் போதும், ‘ஒன் சி பாஸ்’ என்று கூசாமல் சம்பளம் கேட்கும்
கூமுட்டை ஹீரோக்களே… கௌதமுக்கு அவங்க அப்பா போட்டுக் கொடுத்திருக்கும்
ரூட்டை கவனிச்சீங்களா?
0 comments:
Post a Comment