மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடல்' படத்தின் நாயகன், நாயகியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து, நாயகன் கெளதம் கார்த்திக், நாயகி துளசி, கார்த்திக், அர்ஜுன், அரவிந்த்சாமி மற்றும் பலர் பங்கேற்றார்கள்.
நிகழ்ச்சியை அர்ஜுன், சுஹாசினி இருவரும் தொகுத்து வழங்கினார்கள். கார்த்திக் தனது மகன் கெளதம் கார்த்திக்கை
அறிமுகப்படுத்தி வைத்து
பேசினார். அப்போது " அர்ஜுன் நடித்த முதல் படத்தில் நான் சிறு வேடத்தில் நடித்தேன். தற்போது எனது
மகன் கெளதமின் முதல் படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக
இருக்கிறது.
நானும் ராதாவும் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானோம். தற்போது எங்களது வாரிசுகள் மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது அரவிந்த் சாமி என்னிடம் ஏன் நீங்க படப்பிடிப்பு வருவதே இல்லை என்று கேட்டார். அதற்கு அவ்ளோ பேர் இருக்கீங்க.. நீங்க அவனை பத்திரமா பாத்துப்பீங்கனு எனக்கு தெரியும்னு சொன்னேன்!" என்றார்.
அர்ஜுன் "கெளதம் கார்த்திக் ஒரு DEDICATED ACTOR " என்று புகழாரம் சூட்டினார். நடிகை ராதா ஊரில் இல்லாத காரணத்தால் துளசியை இயக்குனர் மணிரத்னம் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.
"நடிப்பு என் ரத்தத்தில் இருக்கு.. என் குடும்பத்தில் பலர் திரைத்துறையில் இருக்கிறார்கள் என்பதால் எனக்கு கேமிராவை பார்த்து பயம் கிடையாது " என்று கூறினார் துளசி.
மேடையில் அமைதியாக தோன்றிய ஏ.ஆர்.ரஹ்மான், நேராக பியானோ வாசிக்க அமர, அர்ஜுன் "நீங்களும் - மணிரத்னமும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் உங்கள் பிடித்த ஏதாவது 3 பாடல் சொல்லுங்கள்" என்று கேட்க, அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பியானோவில் 'சின்ன சின்ன ஆசை' உள்ளிட்ட 3 பாடல்களை வாசித்து காட்டியது தான் விழாவின் ஹைலைட்.
அதனைத் தொடர்ந்து 'அடியே அடியே' பாடலுக்கு ரஹ்மான் பியானோ வாசிக்க, பாடகர்கள் பாடினார்கள். அதன் பின்னர் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துரையாடும் நிகழ்ச்சி துவங்கியது.
முதலிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் " சார்.. 'கடல்' படத்தின் பின்னணி இசை தான் போய்க் கொண்டிருக்கிறது. எப்போது தயாராகும் என்று கேட்காதீர்கள். இப்போது கூட உங்களது வேலைக்காக தான் இங்கே வந்திருக்கிறேன் " என்று கூறினார்.
மணிரத்னம் சிரித்துக் கொண்டே " இருபது வருடங்களாக எனக்கு நல்ல பாடல்களை கொடுத்து கொண்டிருப்பதற்கு நன்றி" என்று கூற ஏ.ஆர்.ரஹ்மான் குறுக்கிட்டு "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார்.... YOU ARE MY GURU! " என்று கூறினார்.
இறுதியாக 'கடல்' படக்குழுவினர் அனைவரும் மேடையில் குழுமினார்கள். நிகழ்ச்சி தாமதமாக தொடங்கினாலும், குறுகிய காலத்தில் சுவாரசியமாக நிறைவுற்றது.

0 comments:
Post a Comment