Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட் குஷ்பு

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:


  • விகடன் மேடை: குஷ்பு

    கு.சிவகுரு, பாண்டிச்சேரி. ''கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' ''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு. ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன். . .




    4. ''உங்களுக்கும் நடிகர் கார்த்திக்குக் குமான ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷல்னு சொல்றாங்களே... அப்படி என்ன ஸ்பெஷல்?''


    சி.பி - தமிழனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா படத்தை முதல்லியே தனியா போய் பார்த்திருப்பான்.. ஆனாலும் படம் பார்த்தவன் கிட்டே கதை கேப்பான்.. ஹி ஹி

    ''தமிழ் சினிமாவில் அறிமுகமாகறதுக்கு முன்னாடி இருந்தே கார்த்திக்கை எனக்குத் தெரியும். நான் சோழா ஷெரட்டன் ஹெல்த் கிளப்புக்குப் போவேன். கார்த்திக்கும் அங்க வருவார். அப்ப இருந்தே அவர் எனக்குப் பழக்கம். 'வருஷம் 16’ சேர்ந்து நடிச்சப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் இறுக்கமாச்சு.


    சி.பி - ஹி ஹி ஹி நெருக்கம் ஆச்சு.. இறுக்கம் ஆச்சு..


    அந்தப் படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் நாங்க சேர்ந்து நடிக்கலை. அப்புறம் 'கிழக்கு வாசல்’ பண்ணும்போது எனக்கும் அவருக்கும் முட்டிக்கிச்சு. பெரிய சண்டை. 'இனி, உன்கூடப் படமே பண்ண மாட்டேன்’னு அவரும், 'நீ நடிக்கிறேன்னா, நான் அந்தப் பட வாய்ப்பையே வேண்டாம்னு சொல்லிடுவேன்’னு நானும் சொல்லிட்டுப் பிரிஞ்சிட் டோம்.


    அப்புறம் முழுசா மூணு வருஷம் நாங்க ஒரு வார்த்தைகூடப் பேசிக்கலை. மூணு வருஷ இடைவேளைக்கு அப்புறம் சேர்ந்து நடிச்ச படம்தான் 'விக்னேஷ்வர்’. அப்புறம் திரும்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போதிருந்து ஏதாவது ஒரு பிரச்னைன்னா, ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குவோம்.


    கார்த்திக், சுந்தர்கூட 'உள்ளத்தை அள்ளித் தா’ படம் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போதான் நான் சுந்தர்கூட லவ்ல இருந்தேன். ஊட்டியில் அந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்ப, நானும் ஊட்டியில் ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்ப சுந்தர்கிட்ட, 'இந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் வாழ்க்கை அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொண்ணு. இவளை ஏமாத்தணும்னு நினைச்சா, நீதான் ஏமாந்து போவ’ன்னார் கார்த்திக்.


    சி.பி - அது வாழ்த்தா? சாபமா?


    சுந்தர், கார்த்திக்கை 'பாஸ்’னுதான் கூப்பிடுவார். கார்த்திக்கைப் பத்தி யாராவது தப்பாப் பேசுனா, சுந்தருக்கு சட்டுனு கோபம் வந்திரும். எங்க குடும்பத்தில் கார்த்திக் ஒரு முக்கியமான மனிதர்!'

    Related Posts :



    0 comments:

    Post a Comment