அகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்
980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒரு சிறந்த நடிகர் என்பது தமிழ் நாட்டு ரசிகர்கள் அனைவரும் அறிவர். கார்த்திக் ஒரு இயல்பான நடிகர். இன்று வரை அவரின் இடத்தை நிரப்புவதற்கு ஒருவர் கூட இல்லை என்பதே அவருடைய நடிப்பிற்கான வெற்றியாகும். கார்த்திக் பல படங்களிலும், பல வேடங்களிலும் நடித்திருந்தாலும் எனக்கு அவருடைய பல படங்களில் மிகவும் பிடித்த படம் இந்த 'கோகுலத்தில் சீதை'. அதுமட்டுமல்ல, அகத்தியன் என்ற சிறப்பான இயக்குனரின் கூட்டணியில் கார்த்திக் நடித்த அருமையான திரைப்படம் இது.
ரிஷி ஒரு பெண் பித்தன். 'காதல் ஒரு கெட்ட வார்த்தை' என்பவனின் வாழ்க்கையில் வருகிறாள் நிலா. நிலாவை அடைய நினைக்கும் அவன், பின்பு அவள் தன் நண்பனின் காதலி என்று தெரியவந்ததுடன் அவனின் ஆசையை நட்புக்காக மறக்கிறான். தன் காதலனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரிஷி வீட்டில் அடைக்கலமாகிறாள் நிலா. ரிஷியின் வாழ்க்கை முறை தான் அவனை தவறானவனாக மாற்றியது என்பதை ரிஷிக்கு சுட்டிக்காட்டுகிறாள் நிலா. கொஞ்சம் கொஞ்சமாக நிலாவை காதலிக்கிறான் ரிஷி. ரிஷியின் காதலை நிலா ஏற்றாளா என்பதை மிக அழகான திரைக்கதையோடும், இயல்பான வசனத்தொடும் வெளியான படம் இந்த 'கோகுலத்தில் சீதை'.
ரிஷியாக கார்த்திக். 'நவரச நாயகன்' என்ற பட்டம் அவராக வைத்துக்கொண்டாரோ இல்லை மற்றவர்கள் வைத்தார்களோ தெரியவில்லை. இவருக்கு இந்த பட்டம் மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கின் Body Language மற்றும் Dialogue Delivery செம. ஒரு பணக்கார பேர்வழியின் நடை, உடை, பாவனை என்று கார்த்திக் பக்காவாக பொருந்தியிருக்கிறார் இந்த ரிஷி கதாபாத்திரத்தில். கார்த்திக்கை பற்றி சுவலட்சுமி MD என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிப் புகழும்போது கார்த்திக்கின் நடிப்பு, ஆஹா. குறிப்பாக 'எனக்கு அம்மா, அக்கா, தங்கச்சி இருந்திருந்தா நான் ஏன் இப்படி கண்ட பொண்ணுங்களோட வெளியபோகப்போறேன்?' என்று தன் நியாயத்தை சொல்லும் இடம், சூப்பர். கார்த்திக் சின்னச் சின்ன முகபாவனைகளில் கூட மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கார்த்திக் போன்ற நடிகர்களை நாம் தொலைத்தோமா இல்லை அவர்களாகவே தொலைந்து போனார்களா என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது.
நிலாவாக சுவலட்சுமி. நிறைவான நடிப்பு. குறிப்பாக, அழகான ஒரு குழந்தை முகம் இவருக்கு. கார்த்திக்கின் அப்பாவாக மணிவண்ணன், ஒரு ப்ராக்டிகலான கதாபாத்திரம் இவருடையது. கூடவே இவரின் நக்கலான வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. 'பெண் புரோக்கராக' தலை வாசல் விஜய் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண்மணியிடம் மூச்சு விடாமல் பேசி 'கரெக்ட்' பண்ண பார்த்து அடி வாங்கும் இடம், நச். IC மோகன் என்ற கதாபத்திரத்தில் வரும் கரனின் நடிப்பு வரவேற்புக்குரியது. கொஞ்ச நேரமே வந்தாலும் பாண்டு நம்மை கவனிக்க வைக்கிறார். தேனிசை தென்றல் தேவாவின் இசை மிகவும் அருமை. ஒவ்வொரு பாடலும் எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடிக்கும். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் அகத்தியன். இந்த படத்தில் எந்த ஒரு இடத்திலும் ரெட்டை அர்த்த வசனமோ, ஆபாசமோ துளியும் இல்லை. வன்முறைக்காட்சிகள் எதுவும் இல்லாமல் மிக அழகாக இயக்கி இருக்கிறார் அகத்தியன்.
இந்த படம் 1996 அன்று வெளிவந்தது. இந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப்படமாகும். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பவன் கல்யான், மந்த்ரா நடிப்பில் 'கோகுலம்லோ சீதா' என்ற பெயரில் வெளியாகி அங்கும் பெரும் வெற்றி பெற்றது. என்னை பொறுத்தவரை நடிகர் கார்த்திக்கின் நடிப்பிற்கு இந்த கோகுலத்தில் சீதை ஒரு 'மாஸ்டர் பீஸ்'.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
POST LINK http://oorkavalan.blogspot.com/2011/08/blog-post_14.html
3 comments:
I'm a great well wisher&fan of karthik sir, since my childhood days.what is published here about Karthik sir is absolutely true. He is the only super, talented Hero, master of all generation in Tamil cinema industry.no one can take his place.as it's mentioned here no one could'v been suited this much for Rishi's role, karthik sir didn't act but superbly he lived as Rishi with all his magical expressions & dialogue delivery. in all his movies we never seen him as acting rather he lived as the character with his dedicated & passion for acting.i'm very much impressed with his characters from idhayathamarai, varusham 16, Kizhaku vassal, Gokulathil Seethai, Deiva vakku, Nilave mugam Kattu, Pooveli, Ponnumani, Muthu kalai, unnidathil ennai koduthen,Chinna jameen, lovely...etc., But it's a fate of our society that a person with too innocence, compassion & gentleness are facing more problems & easily tripped by others. Feel so pleasure to see Karthik sir back to the silver screen again with same charmness & God's given new energy.May God bless him abundantly with good health happiness and long....life. thanks to the 'Fan's club'for publishing rare news to know more about Karthik sir personally.
Post a Comment