Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

எனக்கிருக்கும் மக்கள் எப்போதும் இருப்பாங்க! - கார்த்திக்

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels: ,


  • எனக்கிருக்கும் மக்கள் எப்போதும் இருப்பாங்க! - கார்த்திக்
    சீசனுக்கு பறவைகள் வேடந்தாங்கல் வர்ற மாதிரி, எலக்ஷனுக்கு எல்லோரும் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' தலைவர் கார்த்திக்கை ஒரு வழியாக சந்தித்தே விட்டோம். பரவாயில்லை. ஆள் இப்போ ரொம்பவே மாறிப் போயிருக்கிறார். எகிப்து புரட்சியிலிருந்து கறுப்புப் பண பொருளாதாரம் வரைக்கும் பேசுகிறார்.
    உங்களுடைய அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் கொள்கைதான் என்ன...?
    "சில வருஷத்துக்கு முன்னால சினிமாவா? அரசியலா? என்கிற தடுமாற்றத்துல இருந்தேன். காரணம் என்னை அப்படி படுத்தினாங்க. ஆனா என் ரசிகர்களும், மக்களும் என் மேல வெச்சிருக்கும் நம்பிக்கைக்காக 2008-ல் இந்த கட்சியைத் துவங்கினோம். புதிய முயற்சி, மாபெரும் புரட்சி, பகையில்லா வளர்ச்சி, இளைஞர்களின் எழுச்சி. மக்களின் மகிழ்ச்சி இதுதான் கட்சியின் கொள்கை. என்றைக்கோ வரலாற்றில் நடந்த விஷயங்களை இப்ப சொல்லி இரண்டு பிரிவுகளுக்கிடையே பகையை வளர்க்கக் கூடாது."
    உங்க கூட்டணி முடிவு பண்ணிட்டீங்க போல...?
    "ஆமா. கடந்த 19-ம் தேதி ஜெயலலிதாவை சந்திச்சு கூட்டணி பற்றி பேசி முடிச்சுட்டேன். இந்த வருஷத்தோட முதல் மரியாதையை அவங்களுக்கு நான்தான் செய்தேன். 'வாங்க தம்பி...'ன்னு பாசமா பேசினாங்க. இனி என்னோட மூத்த சகோதரி மேடம்தான். என் மனசுல உள்ளது என்னன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியும். தேர்தல் சம்பந்தமான எந்த முடிவையும் அவங்கதான் சொல்லணும், அதுக்காக காத்திருக்கேன்."
    விஜயகாந்த் அ.தி.மு.க.வோடு சேரும் வாய்ப்புத் தெரியுது. இது உங்களுக்கு தர்மசங்கடமான நிலைமையா இருக்குமே?
    "எனக்கிருக்கும் மக்கள் எப்போதும் இருப்பாங்க. ரொம்ப உணர்வுபூர்வமானவங்க. ஒரு சமுதாய மக்கள் மட்டுமே இருந்தது போயி இப்ப அனைத்து சமுதாய மக்களும் சேர ஆரம்பிச்சிருக்காங்க. இது எங்கள் கட்சியின் பலத்தை அதிகப்படுத்தியிருக்கு."
    நீங்களே ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்தி வந்ததே?
    "இந்த அரசியல் வேலைகளுக்கிடையில் மூணு ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிட்டேன். இதுக்காக நிறைய ஆய்வுகள், புத்தகங்களை தேடிப் படிச்சிருக்கேன். முதல்ல தேர்தலில் நான் நிற்பேனா, வேற ஒருத்தரை நிற்க வைப்பேனாங்கறது தெரியல. அதை இப்ப சொல்ல முடியாது. தேர்தலுக்குப் பிறகு திரையுலகப் பயணம் இருக்கு."
    எந்த மாதிரியான கதை எழுதியிருக்கீங்க?
    "சுதந்திர காலத்துக்கு முந்தைய காலகட்டத்துல நடந்த ஒரு உண்மைக் கதை. அப்புறம் தீவிரவாதம் பற்றிய கதை, முழுக்க முழுக்க அரசியல் கதை இப்படி மூணு ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு."
    உங்க மகன் சினிமாவுல நடிக்கப் போறதா ஒரு பேச்சு ரொம்ப நாளா வந்துகிட்டிருக்கே....?
    "இப்ப சினிமா இல்லாட்டியும் நான் எப்படி பாதுகாப்பா இருக்கேனோ அப்படி என் பிள்ளைகளும் இருக்கணும். அதுக்கு முதல்ல அவங்களை நல்லா படிக்க வைக்கணும். கௌதம், காயன், தரன் இந்த மூணு பேரும் கல்லூரிப் படிப்பு முடிச்ச பிறகு அவங்க விருப்பப்பட்டா சினிமாவுல சேர்ப்பேன்."
    மீடியாக்களில் உங்களைப் பார்க்கிறதே பெரிய விஷயமா இருக்கே... பொதுமக்கள் அவ்வளவு சுலபமா சந்திக்க முடியுமா?
    "அப்படி ஒரு மாயை ஏற்படுத்தி வச்சிருக்காங்க சார். இதோ, கட்சி ஆபீஸ் போட்டாச்சுன்னா எந்நேரமும் என்னை வந்து யாரும் சந்திக்கலாம். எல்லாம் மாயைதான் நம்புங்க."

    Related Posts :



    0 comments:

    Post a Comment