கார்த்திக், பிரபுவுக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி விருது-ஏ ஆர் ரஹ்மானுக்கும் விருது

ஆண்டுதோறும் வி 4 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் விழா நடந்தது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பட அதிபர்கள் கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், நடிகர் கே.ராஜன், நடிகைகள் தேவயானி, லிசி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருதை நடிகர் கார்த்திக் பெற்றார். பார்த்திபனும், சுகாசினியும் இணைந்து இவ்விருதை அவருக்கு வழங்கினார்கள்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் விருது நடிகர் பிரபுவுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருது ராதாரவிக்கும், கலைவித்தகர் விருது பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் வழங்கப்பட்டன.
ரஜினியின் எந்திரன், சிங்கம், நான் மகான் அல்ல, அங்காடி தெரு, மதராசபட்டினம், பையா, மைனா ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இயக்குனருக்கான விருதை வசந்தபாலன், விஜய், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, பிரபுசாலமன், சமுத்திரக்கனி ஆகியோர் பெற்றனர்.

சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். சிறந்த நடிகர் விருதை ஜெயம்ரவி, ஆதி, ஸ்ரீகாந்த், அருண்விஜய், கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர்.
காமெடி நடிகர்கள் விருது வடிவேலு, விவேக் ஆகியோருக்கும், குணசித்திர விருது சரண்யாவுக்கும், வில்லன் நடிகர் விருது ஏ.எல்.அழகப்பனுக்கும் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை டைமண்ட்பாபு, சிங்கார வேலு மற்றும் ரியாஸ் அகமது ஆகியோர் செய்திருந்தனர்.
1 comments:
karthik is a wonderful actor, i am waiting for Jintha, Amaran 2................ also i am surprising for his acting in ponnumani, chinna kannamma, gokulathil seethai, kizhakku vasal, etc........
Post a Comment