பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என மூத்த தலைமுறை இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். புதிய தலைமுறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் எனத் திரையுலகத் திருவிழாவாக கொண்டாடிக்கொண்டு இருந்தது திரையுலகம்!

நவரச நாயகன்' கார்த்திக் மேடை ஏறியதும் ராதாவையும் மேடைக்கு அழைத்தார்கள். "முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு தமிழ் தெரியாது. மத்தவங்க பேசுறதைக் கவனிப்பேன். அப்பவே, கார்த்திக் பேசுற தமிழ் வித்தியாசமா இருக்கும். 'ஓ... ரெண்டு தமிழ் கத்துக்கணும்போல'ன்னு நினைச்சேன்!" என்று கார்த்திக்கைக் கலாய்த்தார் ராதா.
" 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் எனக்கு பாரதிராஜா கொடுத்த முதல் வசனம்... 'ஏன் லேட்டு?' அதுக்கு ராதா 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு சொல்வாங்க. முதல் டயலாக்கை மறக்கக் கூடாதுல்ல... அப்புறம் நான் எல்லாப் பட ஷூட்டிங்குக்கும் லேட்டாப் போக ஆரம்பிச்சேன். 'ஏன் லேட்டு?'னு கேட்டா, 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு பதில் சொல்ல ஆரம்பிச்சேன். ஆக, நான் லேட்டா வர ஆரம் பிச்சதுக்குக் காரணம் இயக்குநர்கள்தான்!" என்று கார்த்திக் சொல்ல, ரசித்துச் சிரித்தார்கள் இயக்குநர்கள்!
0 comments:
Post a Comment