கார்த்திக் மாறிட்டாருங்க!
எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களைத் தொடர்ந்து தொழிலதிபர் ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கும் படம் புலிவேஷம். பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே., நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடி சதா. ஆர்.கே., - சதா தவிர திவ்யா விஸ்வநாத் என இன்னொரு நாயகியும் நடிக்கும் புலிவேஷம் படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய பாத்திரமொன்றில் நடிப்பது ஹைலைட்.முக்கிய பாத்திரமென்றால்...? அக்னி நட்சத்திரம் கார்த்திக் போன்று விறைப்பான, முறைப்பான பாத்திரமாம் இது. கார்த்திக்கின் இன்னொரு அவதாரம் என்பதோடு இப்பாத்திரம் கார்த்திக்கை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்தும் என சத்தியம் செய்கிறார் இயக்குனர் பி.வாசு.
கூடவே கார்த்திக் நிறைவே மாறிட்டாருங்க. 8 மணி சூட்டிங் என்றால் 7.45 மணிக்கே வந்து விடுகிறார் என்றும் கார்த்திக் புகழ் பாடினார் வாசு. இரண்டையும் நம்புவோம்!

0 comments:
Post a Comment