திரும்ப வாருங்கள் கார்த்திக்
அன்புள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் எனது இந்த பதிவை வாசிப்பிர்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை ஆனால் எப்படியேனும் உங்களுக்கு இதே மாறியான கருத்துக்களை நேற்றிலிருந்து அதிகம் உங்களை நோக்கி புறப்பட்டதை நிச்சியம் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.
என்னை பொறுத்த வரை நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலுக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவன். அது தொழிலோ அரசியலோ கலைகளோ நட்பு அல்லது உறவுகளோ . நமக்கு ஒன்று அமைந்து விட்டால் அதில் நாம் முழு வீச்சுடன் இறங்கி அதன்
நீள அகலங்களை நமக்கு ஏற்றால் போல் அமைதுகொள்கிறோம்.அப்படி பட்ட ஒரு சிறந்த இடம் சினிமாவில் உங்களிடம் மட்டுமே தனித்தன்மையுடன் இருந்தது . இடையில் நீங்கள் இல்லாத போது கூட அப்படி பட்ட ஒரு இடத்தை யாராலும் யோசிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனம் .
நேற்று இரவு கமலா திரையரங்கில் உங்கள் புதிய படமான மாஞ்சா வேலுவை
பார்த்தேன் சார் உங்கள் அறிமுக காட்சியில் திரைகதை படி சொக்கி போனவள்
கதாநாயகி மட்டும் அல்ல சார் எங்களை போன்ற ரசிகர்களும் தான். இன்னமும்
எத்தனை அழகாக சண்டை போடுகிரிகள் குறிப்பாக அந்த பிணவறை சண்டை காட்சிகள் .
இன்னமும் அதே கவர்ச்சி எத்தனை எத்தனை பெண் ரசிகர்கள் வெட்கத்துடன் நீங்கள் "
ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜ " பாடலுக்கு குறும்பு நடனம் ஆடிய போது
ரசித்தார்கள் என்பதை அருகே அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன் சார் .இடைவேளையில் ராவணன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பினார்கள் ஐஸ்வர்யா , விக்கரம் என்று வந்த போது எல்லாம் அரங்கில் யாரும் விசில் அடிக்க வில்லை சார் ஒரு ஜீப்பில் நீங்கள் தொப்பியுடன் வருவீர்களே அப்போது அனைவரும் அடித்த விசில் சத்தம் உங்கள் வீடுவரை கெட்டு இருக்கும் என்று நம்புகிறேன் .
உங்களுக்கு இந்த திரையுலகில் யாரும் போட்டி இல்லை சார் உங்கள் இடம் என்றுமே காலியாக உள்ளது அந்த இடத்திருக்கு யாரும் வரவே முடியாது சார் உங்களை தவிர .
POST LINK http://insight-ganapathi.blogspot.com/2010/05/blog-post_22.html


0 comments:
Post a Comment