கதாநாயகிகளாக முன்னணி நாயகி சதா மற்றும் அறிமுக கேரள வரவு திவ்யா விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.
கிராமிய மணத்துக்கு கிராமம், காதலுக்கு காதலும், காதலே இல்லாமலும், ஆக்ஷனுக்கு ஆக்ஷனும், அதிகபட்ச பாசத்தையும் மையக்கருவாகக் கொண்டு பயணிக்கும் கதை இது.
ஒரே உறைக்குள் இரு கத்திகள் என்பது போல, ஒரே உருவத்தில் அப்பாவி இளைஞனையும் அதிகபட்ச மூர்க்கம் கொண்ட வீரனையும் ஆர்கேயின் ஒரே உருவத்தில் காணலாம்.
சதாவுக்கு சவாலான வேடம் இந்தப் படத்தில். படத்தின் இறுதிவரை சதாவின் பாத்திரத்தை கணிக்கவே முடியாத அளவுக்கு மகா சஸ்பென்ஸ் பாத்திரம் அவருக்கு.
திவ்யா விஸ்வநாத்துக்கோ அன்றைய, ‘கிழக்கே போகும் ரயில்’ ராதிகாவை மீண்டும் திரையில் பார்ப்பது போன்ற அழுத்தமான கிராமத்து வேடம்.
‘புலிவேஷத்தின்’ இன்னொரு சிறப்பம்சம், கார்த்திக்கின் இன்னொரு அவதாரம். பழைய கார்த்திக் என்று நினைத்துவிடாதீர்கள். ஷூட்டிங் 8 மணி என்றால், 7.45-க்கே களத்தில் ஆஜராகி யூனிட்டையே மிரட்டும் புதிய கார்த்திக் இவர்!
அக்னி நட்சத்திரம் போன்று விறைப்பான, முறைப்பான இந்தப் பாத்திரம் அவரை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுவந்து நிறுத்தும் என்கிறார் இயக்குநர் பி வாசு.
ஆர் கேயிடம் ஒரு நாள், ‘இப்படியிருந்தா கிராமத்து கேரக்டருக்கு சரியா வராதே.. நல்லா மெலியனுமே’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
அதன் பிறகு படத்தின் டிஸ்கஷன் நடக்கிற இடத்தின் பக்கமே போகவில்லை ஆர்கே.
வாசுவே கூப்பிட்டும் இரண்டு மாத காலம் எங்கும் போகாத ஆர்கே, ஒருநாள் திடீரென்று இறுக்கமான பனியன் ஒன்றை அணிந்தபடி வாசுவின் முன்னாள் போய் நிற்க, ஆச்சரியப்பட்டுவிட்டார் இயக்குநர்.
கிட்டத்தட்ட தனது எடையில் ஆறு குலோ குறைத்து ஒரு முழு கிராமத்தானாகவே மாறியிருக்கிறார் ஆர்கே.
கலகல காமெடிக்கு கஞ்சா கருப்பு. பாவம், புலிவேஷம் படத்துக்காக தனது முதலிரவையே தள்ளிவைத்திருக்கிறார் கஞ்சா கருப்பு. திருமணமான கையோடு பரீட்சை எழுதப் போய்விட்டார் அவர் மனைவி. வரட்டுமே என்று காத்திருந்தவருக்கு கையோடு காத்திருந்தது முழுநீள காமெடியன் வேடம் புலிவேஷத்தில். மனைவி பரீட்சை முடிந்த வர, இவர் புலிவேஷத்துக்காக பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்.
இன்று வரை படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.
சீக்கிரம் முடிச்சு என்ன தேனிலவுக்கு அனுப்பி வையுங்கப்பா என புலம்பிக்கொண்டிருக்கிறார் கஞ்சா, எதிரில் தென்படுவோரிடமெல்லாம்.
கஞ்சாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கப் போகிறவர் லொள்ளு சபா ஜீவா.
மன்சூரலிகானுக்கும் இளவரசுக்கும் வெயிட்டான கேரக்டர்கள் இந்தப் படத்தில்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் வாசு கூறுகையில், “எல்லா காலகட்டத்திலும் பெரிய ஹீரோக்களோடு இணைந்து படம் பண்ணிவிட்டதால், அடுத்த கட்ட ஹீரோக்களை மிஸ் பண்ணியே வந்திருக்கிறேன். அடுத்த கட்ட ஹீரோக்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்ட இருந்தது. அதை ஆர்கேயுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன். புலிவேஷத்துக்கு காரணம் சொல்ல வேண்டுமென்றால்… எல்லா மனிதனுக்குள்ளும் கோபம் ஒரு புலி வேஷம் போட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது.
அது எதனால் எப்படி வெளிப்படுகிறது, என்ன விளைவு என்பதை புலிவேஷம் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு விளக்கம். படம் முழுக்க அடிநாதம் போல் ஒரு சென்டிமெண்ட் ஓடிக் கொண்டே இருக்கும்.
புலிவேஷம் ஒரு அழகான படம். எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்” என்றார் வாசு.
நிறைய ஆக்ஷனும் பரபரப்பும் நிறைந்த படம் புலிவேஷம் – ஆர்கே
ஆர்கே கூறுகையில், “எல்லாம் அவன் செயல், அழகர் மலை வெற்றிப் படங்களுக்குப் பிறகு, மிகக் கவனமாக அடுத்த படம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, வெற்றி இயக்குநரான பி வாசு சாரின் புலிவேஷம் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன உடன் உடம்பை மட்டும் குறைக்கவில்லை… நிஜமாகவே பலத்த காயங்களும் பட்டுள்ளேன் படப்பிடிப்பின்போது. என்னை மரத்தில் தொங்கவிட்டு வேறு சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
நல்ல திரைக்கதை, அழகான பாடல்கள் என நல்ல பொழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களுடனும் தயாராகிறது புலிவேஷம்” என்றார்.
படத்தின் கிராமத்துக் காட்சிகள் தென்காசியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் அணைக்கட்டுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
பாடல்கள் மற்றும் கதைக்குத் தேவையான முக்கியக் காட்சிகள் சில வெளிநாடுகளில் படமாக்கப்படும்.
படத்தில் ஏகப்பட்ட இனிய அதிர்ச்சிகள் வாசகர்களுக்குக் காத்திருக்கின்றன.
அதிக பொருட்செலவுடன் உருவாகி வருகிறது புலிவேஷம்!
0 comments:
Post a Comment