நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் கார்த்திக்

அருண்விஜய் கதா நாயகனாக நடிக்கும் “மாஞ்சாவேலு” படத்தில் நடிக்கிறார் கார்த்திக். “மாஞ்சா வேலு” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்தியம் தியட்டரில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே கார்த்திக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1980-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த கார்த்திக் பிறகு திடீரென்று ஒதுங்கினார். பல வருட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார்.
இடையில் சில காலம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். சில சூழ்நிலைகளால் அந்த நிலைமை ஏற்பட்டது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடிகர்கள் விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஷாம், சுந்தர்.சி, சிபிராஜ், ஜெய், உதயா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், சிவ சக்தி பாண்டியன், “மாஞ்சா வேலு” பட தயாரிப்பாளர்கள் டாக்டர் மோகன், ஹேமந்த், இசையமைப்பாளர் மணிசர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment